கடற்கரை பாறைகளில் சிக்கி பரிதாபமாக பலியான திமிங்கலங்கள்

Report

நியூசிலாந்து கடற்கரை பகுதியில் பாறைகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

கோரமண்டல் தீபகற்ப பகுதியில் உள்ள கடற்கரை பகுதிக்கு வந்த சுமார் 50 திமிங்கலங்கள் எதிர்பாராதவிதமாக பாறைகளில் சிக்கின.

இநிலையில் இவற்றை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுமார் 25 திமிங்கலங்கள் மீட்கப்பட்டு ஆழ்கடலுக்குள் விடப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டவை பலியானதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

1156 total views