ஆஸ்திரேலியாவில் கைவிலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்ட புகலிடகோரிக்கையாளர்கள்!

Report
124Shares

மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக புகலிடகோரிக்கையாளர்களை கைவிலங்கடப்பட்டு கொண்டு சென்ற நிகழ்வு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

புகலிடகோரிக்கையாளர்களை குற்றவாளிகளைப் போல அழைத்துச்சென்றதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தின் கீழ், இந்த நடைமுறை சட்டவிரோதமானது எனக் கூறப்படும் நிலையில் Public Interest Advocacy மையம் இது தொடர்பாக பெடரல் நீதிமன்றத்தில வழக்குத் தொடுத்துள்ளது.

மனநலச் சிக்கல்கள், சித்ரவதை போன்றவற்றை கடந்த வந்த புகலிடகோரிக்கையாளர்களை இவ்வகையில் நடத்துவது பாகுபாடானது எனவும், பாதுகாப்பு வேண்டி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தேன். ஆனால் தடுப்பில் நான் வைக்கப்பட்டிருப்பது கொடுங்கனவாக இருப்பதுடன் எனக்கு கைவிலங்கிடப்பட்டிருப்பது எனது மனதை மேலும் மேலும் பாதிக்கிறதாக யாசிர் எனும் புகலிடகோரிக்கையாளர் கூறியுள்ளார் .

இதேவேளை தேவையற்ற இந்த கைவிலங்கு பயன்பாடு ஆஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் Commonwealth Ombudsman கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

“கைவிலங்கிடப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்து காத்திருப்பதை அவர்கள் விரும்பவில்லை. கைவிலங்கிடப்பட்ட அவர்களையே அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தாய்மார்கள் அவர்களைக் கண்டு குழந்தைகளை இறுகப் பிடித்துக்கொள்கிறார்கள் ” என அகதிகளுக்கான மருத்துவர்கள் குழுவின் நிறுவனர் பேரி பேடர்போட் கூறியிருக்கிறார்.

5543 total views