கனடாவில் சாலையில் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்..

Report

கனடாவில் மோட்டார் வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Saskatchewan மாகாணத்தின் Regina நகரில் தான் இச்சம்பவம் சனிக்கிழமை காலை நடந்துள்ளது.

சாலையில் வேகமாக மோட்டார் வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தில் சிக்கியதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவுடன் வந்த பொலிசார் படுகாயமடைந்த குறித்த நபரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறந்தவரின் விபரம் மற்றும் விபத்து குறித்த விபரங்களை பொலிசார் இன்னும் வெளியிடாத நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

5791 total views