டொரன்ரோவில் சாலையில் நடந்து சென்ற போது சுட்டு கொல்லப்பட்ட நபர்

Report

கனடாவில் நடைபாதையில் நடந்து சென்ற நபர் நள்ளிரவில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேற்கு டொரன்ரோவில் இச்சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு 1.40 மணிக்கு நடந்துள்ளது.

அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட நிலையில் ரோந்து பணியில் இருந்த பொலிசார் சென்று பார்த்தனர்.

அப்போது துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்து படுகாயங்களுடன் கிரைக் கேம்பெல் (42) என்ற நபர் சாலையில் கிடந்தார்.

இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் சூழலில் சம்பவ இடத்தில் இருந்து சில ஆதாரங்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது வீடியோ ஆதாரங்களை வைத்திருந்தாலோ தங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2473 total views