ஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை!

Report

வின்ட்சர், ஒன்ராறியோ-ஒன்ராறியோவின் தென்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வீதிகள், வீடுகளின் நிலக்கீழ் அறைகள் போன்றன வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளன. 24-மணித்தியாலங்களிற்கும் குறைந்த நேரத்தில் 200-மில்லி மீற்றர்களிற்கும் மேலான மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடி முழக்கங்களுடன் மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளம் நிறைந்த நிலக்கீழ் பகுதிகளை தவிர்க்குமாறு வின்ட்சர் மேயர் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளார். மின்சார ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதே காரணமாகும்.

வெள்ளம் காரணமாக வின்ட்சர் பொது வைத்தியசாலையின் மெற்றோபோலிட்டன் வளாகத்தின் தரை தளம் அவசர சேவை பிரிவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூடப்பட்டது.

26282 total views