வெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு!

Report
252Shares

வெப்ப மண்டல புயல் ஹார்வே ரெக்சஸ் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கியதன் காரணமாக கனடாவில் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அளவில் கனடாவில் எரிவாயுவின் மொத்த விலை சராசரியாக இரண்டு அல்லது நான்கு சதத்தால் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நுகர்வோர் சில சந்தைகளில் அதிக விலை உயர்வை காணலாம் எனவும் மூத்த பெற்றோலிய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கல்கரி, மொன்றியல் மற்றும் ஒட்டாவா போன்ற சந்தைகளில் மொத்த விலை அதிகரிப்பை ஒரு சாக்காக வைத்து எரிவாயு விலையை லிட்டர் ஒன்று 10சதம் மேலதிகமாக உயர்த்தியுள்ளதாக அறியப்படுகின்றது. வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை விலை அதிகரிப்பு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

GasBuddy.com வலைத்தளத்தில் கனடிய எரிவாயு விலை சிறிதளவு மாற்றமடைந்திருக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

9081 total views