‘C’ வடிவில் பிறந்த கனடிய சிறுவன்!

Report
159Shares

எட்மன்டனில் ஆண் குழந்தை ஒன்று‘C’ வடிவில் பிறந்த சம்பவம் நடந்துள்ளது. பிறக்கும் போதே இந்த குழந்தை அரிய நரம்பு மண்டல கோளாறுடன் பிறந்துள்ளது. இதன் காரணமாக இவனது முதுகெலும்பு வளைந்து ‘C’ வடிவில் அமைந்துள்ளது. இவனது வாழக்கைத்தரத்தை மேம்படுத்தக்கூடிய உபகரணம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

கடுமையான முதுகெலும்பு பக்கவாட்டு வளைவு மற்றும் மூட்டு மடக்க பல்வகைத்தன்மையான பிறவி இரத்த சோகையுடன் பிறந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக மூட்டுக்கள் மற்றும் தசைகளில் இயக்கம் குறைந்து காணப்படுகின்றது. 20-வாரங்கள் கர்ப்பத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இவனது முதுகெலும்பு 90 டிகிரி வளைந்துள்ளது.

இவனது உபயோகத்திற்காக பெற்றோர் 13.000டொலர்கள் விலையுள்ள சக்கர நாற்காலி வாங்கியுள்ளனர்.

5846 total views