கடைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

Report
1003Shares

கனடா-சென்ட்.ஜோன்சில் மருந்து கடையொன்றிற்கு சென்ற பெண் ஒருவருக்கு மறக்க முடியாத அனுபவம் சனிக்கிழமை ஏற்பட்டுள்ளது. கடையின் வாகன தரிப்பிடத்தில் தம்பதியர் ஒருவருக்கு பெண்குழந்தை பிரசவிக்க இவர் உதவியுள்ளார்.

சொப்பேர்ஸ் றக் மார்ட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த கிறிஸ்ரிய ரிஷாட் என்பவர் நிக்கோல் மற்றும் றிச்சர்ட் டேவியு இருவருக்கும் உதவி தேவைப்படுவதை கவனித்தார்.

காரிற்குள் இருந்த பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்துள்ளதென மனிதன் தெரிவித்துள்ளார். தம்பதியர் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு செல்ல முயன்ற சமயம் இந்நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையை அடைய முன்னர் குழந்தை வெளியே வர ஆரம்பித்து விட்ட நிலை.

வீதியில் இருந்து வாகனத்தை வெளியே எடுத்த றிச்சர்ட் தொலைபேசியில் எவரையோ தொடர்பு கொள்வரை ரிஷாட் கவனித்ததும் அவர்களது காரை நோக்கி ஓடிய சென்று பார்த்த போது நிக்கோல் காரின் முன் பயணிகள் ஆசனத்தில் இருக்க குழந்தையின் தலை வெளியே வர தொடங்கியிருந்தது.

யோசிக்காது நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் தொலை பேசியில் றிச்சட்டிற்கு உதவ அடிப்படை முதலுதவி தவிர வேறு அனுபவமற்ற ரிஷாட் இவர்களது குழந்தையை உலகிற்கு கொண்டு வர உதவினார்.

தம்பதிகளும் பதட்டமடையாக அமைதியாக இருந்தமை தனது முழு அனுபவத்தையும் பயன்படுத்த உதவியாக இருந்ததென ரிசாட் தெரிவித்தார்.

குழந்தையின் தாய் ஒரு றொக் ஸ்டார். அவரும் பதட்டமடையவில்லை.

பிரசவம் ஒரு சில நிமிடங்களில் நடந்துள்ளது.

குழந்தை காரில் பிறந்ததால் அவளிற்கு கார்லா என பெயரிட்டனர். ஏழு இறாத்தல் 15அவுன்ஸ் நிறையுடைய குழந்தை.

28900 total views