கனடியர்களிற்கு அதி போதையில் வாகனம் செலுத்தும் எச்சரிக்கை விளம்பரங்கள்!

Report
86Shares

ஒட்டாவா- பொழுது போக்கு மரியுவானாவை சட்டமாக்கல் குறித்த யூலை காலக்கெடு இறுதிக்குள் இவை குறித்து போதையில் வாகனம் செலுத்தும் ஆபத்துக்கள் சம்பந்தமான பிரச்சார எச்சரிக்கை விளம்பரங்களை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது.

பொது பாதுகாப்பு அமைச்சர் றல்ப் குட்டேல் இன்று ஒரு தொடர் விளம்பரங்களை வெளியிடுகின்றார். இவை தொலைக்காட்சி, வானொலி, ஆன்லைன் மற்றும் சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்ப பட உள்ளன. மற்றவைகள் விளம்பர பலகைகள் மற்றும் பொது இடங்களிலும் தோன்றும்.

பொது சேவை வீடியோ விளம்பரங்கள் இளைஞர்கள் கூட்டம் ஒன்று போதை மருந்துகளை புகைத்த பின்னர் சிரித்துக்கொண்டும் கதைத்தவாறும் வாகனத்தை செலுத்தி பேரழிவு மிக்க விபத்திற்காளாவதை சித்தரிக்கும்.

16 முதல் 24வயதிற்குட்பட்ட இளையவர்கள் கஞ்சாவின் பாதிப்புடன் வாகனம் செலுத்துவது குடித்து விட்டு வாகனம் செலுத்துவது போன்றதாக கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் வாகனம் செலுத்தும் போது போதை மருந்துகள் பாவித்தல் காரணமாக ஏற்படும் உண்மையான ஆபத்துக்கள் குறித்து அறிந்திருப்பது அவசியமென {MADD Canada} குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான தாய்மார் குழு என்ற தங்களது விளம்பரங்களை வெளிப்படுத்தி வருகின்றன.

3791 total views