நோர்த் யோர்க்கின் பிரைடில் பாத் பகுதியில் சுமார் 160 வீடு உடைப்புச் சம்பங்கள் பதிவு

Report
51Shares

நடப்பு வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நோர்த் யோர்க்கின் பிரைடில் பாத் பகுதியில் சுமார் 160 வீடு உடைப்புச் சம்பங்கள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது உயிரிழப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நெடுங்சாலை 401, லெஸ்லி வீதி, லோறன்ஸ் அவனியூ, பேவியூ அவனியூ ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ள பகுதியிலேயே இவ்வாறான வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

குறிப்பாக வீடுகளில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நேரம், மீண்டும் வீட்டுக்கு வரும் நேரம், உறங்கும் நேரம் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனித்து, கணிப்பிட்டு திருடர்கள் நுதனமாக திருடுகின்றனர்.

இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான வீடு உடைப்புச் சம்பவங்கள் குறித்த இந்த பகுதியில், மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் இடம்பெற்றுள்ளமை பல்வேறு தரப்பினரிடையேயும் அச்சத்தையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

2298 total views