போலியான பொருட்களிற்கு பெயர் போன உலகின் மோசமான பேரங்காடி!

Report
174Shares

ரொறொன்ரோ-போலியான பொருட்களிற்கு உலகில் பெயர் போன அங்காடிகளில் ரொறொன்ரோ பசுபிக் அங்காடியும் ஒன்றென யு.எஸ்.அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த அங்காடியில் காணப்படும் போலி பொருட்கள் "பரந்த மற்றும் பரவலானவை" எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

இப்புதிய அறிக்கையில் அங்காடியில் போலியான ஒப்பனைகள், சன்கிளாஸ்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றன கிடைக்க கூடியதாக இருப்பதாகவும் இவைகளினால் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றன வற்றிற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்சிஎம்பி மற்றும் யோர்க் பிராந்திய பொலிசார் கடந்த இரண்டு தசாப்தங்களாக போலியான மின்னணுவியல்கள், டிவிடிகள், வீடியோ கேம்கள் மற்றும் ஏனைய பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அனைத்தும் மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை எனவும் பசுபிக் அங்காடி விற்பனையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.

பசுபிக் அங்காடி முக்கியமான ஒரு சீன-கனேடிய ஷாப்பிங் சென்ரராகும். மார்க்கம் ஒன்ராறியோவில் அமைந்துள்ளது.

6381 total views