ரொறொன்ரோ பெரும்பாகம் மீண்டும் ஆழ்ந்த உறைபனியில்?

Report
257Shares

ரொறொன்ரோ பெரும்பாக மக்கள் இன்னமும் ஆழ்ந்த உறை பனி தாக்கத்தில் இருந்து முற்றாக விடுபடவில்லை.சில நாட்கள் ஒப்பீட்டளவில் சூடான வெப்பநிலை காணப்பட்ட நிலையில் மீண்டும் மற்றுமொரு எலும்பை நடுங்கவைக்கும் வெப்பநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ரொறொன்ரோ நகரிற்கான அதிதீவிர குளிர் கால நிலை எச்சரிக்கை இன்னமும் அமுலில் இருக்கின்றது.குளிர் காற்றுடன் கூடி சனிக்கிழமை பூச்சியத்திற்கு கீழ் 20ஆக இருக்கும்.

நகரின் கிழக்கில் வசிப்பவர்கள் அல்லது பயணிப்பவர்கள் மிக மோசமான நிலைமையை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிரை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படின் ஆடைகளை அடுக்குகளில் அணிந்து வெளிப்படும் தோல்களை மறைத்து செல்லுமாறு ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு அறிவுறுத்துகின்றது.

தனியாக இருக்கும் வயதானவர்களை கவனிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10055 total views