மொன்றியலில் தக்காளி திருட்டு?

Report
257Shares

மொன்றியலை சேர்ந்த தம்பதியர் சில நாட்களாக அவர்களது தக்காளிப்பழங்கள் காணாமல் போவதை அறிந்துள்ளனர். அணில் தான் குற்றவாளியாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இருப்பினும் அவர்களது பாதுகாப்பு கமரா பதிவுகளை பார்வையிட்டனர். அப்பதிவில் தபால் காரர் கையில் தக்காளிப்பழம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்களது வீட்டின் முன் புறம் தொங்கும் கூடைகளில் தக்காளி வளர்த்துள்ளனர். யூன் மாதத்தில் இருந்து தக்காளிப் பழங்கள் காணாமல் போக தொடங்கியுள்ளது.

மரங்கள் நிறைய குலை குலையாக காணப்பட்ட தக்காளி திடீரென காணாமல் போக தொடங்கின. தங்கள் தேவைகளிற்கு கூட உபயோகிக்கவில்லை என தெரிவித்தனர்.

அண்மையில் இவர்களது முன் கதவில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் தபால்காரர் தங்களது தக்காளிப்பழங்களை நான்கு வெவ்வேறு தடவைகளில் சாப்பிடுவது பதிவாகியுள்ளது.

தபால்காரர் ஒரு போதும் தங்களிடம் வந்து நான் உங்களது தக்காளி ஒன்றை சாப்பிட்டேன். அது மிக சுவையாக இருந்ததென ஒரு போதும் சொல்லவில்லை என வீட்டுகாரர் தெரிவித்தார்.

தபால்காரர் வேலை நீக்கம் செய்யப்படுவதை விரும்பவில்லை ஆனால் ஒரு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம் எனவும் கூறினார்.

இது குறித்து விசாரனை செய்வதாக கனடா போஸ்ட் தெரிவிக்கின்றது.

11069 total views