வங்கி கொள்ளையில் ஆயுதமேந்திய இரு சந்தேக நபர்கள்!

Report
102Shares

வியாழக்கிழமை காலை ஏஜக்ஸில் அமைந்துள்ள ஸ்கோசிய வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆயுத மேந்திய இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். நெடுஞ்சாலை 401மேற்கு பாதையில் பொலிசார் இவர்களை துரத்தி சென்றுள்ளதாக அறியப்படுகின்றது.

ஏஜக்ஸ் றவென்ஸ்குரொவ்ட் மற்றும் ரான்ரொன் வீதி மேற்கில் அமைந்துள்ள வங்கியில் சம்பவம் நடந்துள்ளது.

ஆயுதமேந்திய நபர்கள் இருவர் வங்கியில் கொள்ளையடித்து கொண்டு கிரே நிற மினிவான் ஒன்றில் ஓடிவிட்டனர்.

நெடுஞ்சாலை 401 மேற்கில் அதி வேகத்தில் ஸ்காபுரோ வரை வாகனத்தை துரத்திச்சென்ற பொலிசார் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக துரத்தலை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

சந்தேக நபர்கள் குறித்த அடையாளங்கள் இது வரை வெளியிடப் படவில்லை.

4468 total views