வியாபாரிகளின் கட்டணங்களை குறைக்கும் பெரிய கடன் அட்டை நிறுவனங்கள்!

Report
154Shares

வியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணத்தை குறைக்க பெரிய கடன் அட்டை நிறுவனங்கள் ஒப்பு கொண்டுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிய மற்றும் மத்தியதர-நிறுவனங்கள் வருட மொன்றிற்கு கிட்டத்தட்ட 250மில்லியன் டொலர்கள் வரை சேமிக்க உதவக்கூடிய வகையில் விசா, மாஸ்ரகாட் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய கடன் அட்டை நிறுவனங்கள் தன்னார்வமாக உதவ ஒட்டாவாவுடனான ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளதாக அரசாங்க ஆதாரம் ஒன்று தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.

2020-லிருந்து விசா மற்றும் மாஸ்ரகாட் வர்த்தகர்களிடமிருந்து அறவிடும் சராசரி வருடாந்த கட்டணத்தை 1.5சதவிகிதத்திலிருந்து 1.4சதவிகிதமாக குறைக்கின்றது.

அதன் தனிப்பட்ட வணிக மாதிரியை அங்கீகரிக்கும் வகையில் ஒரு தனி தன்னார்வ அர்ப்பணிப்புடன் வழங்க அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் முன்வந்துள்ளது.

நுகர்வோருக்கு உதவும் என எதிர்பார்க்கப்படும் இந்த மாற்றங்கள் இன்று ஒட்டாவா பலசரக்கு கடை ஒன்றில் நிதி அமைச்சர் பில் மொர்னியு, சிறு வணிகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு புதிய அமைச்சரான Mary Ng ஆகியோரால் தெரிவிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஐந்து வருட காலப்பகுதியில் சிறு வர்த்தகங்கள் ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்க உதவும் எனவும் மேலதிக நிதி சொந்த காரர்கள் முதலீடு செய்ய, விரிவாக்க மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்க ஊக்குவிக்குவிக்கும் என பொதுவாக வெளியிடப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக அறியப்படுகின்றது.

5112 total views