நியு பிறவுன்ஸ்விக் தலை நகரில் துப்பாக்கி சூடு இரு பொலிஸ் அதிகாரி உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.

Report
44Shares

வெள்ளிக்கிழமை நகரின் வடக்கு குடியிருப்பு பகுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக விரெடெரிக்டன்ட் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பெரும்பாலான காலை நேரம் பொது மக்களை வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

நியு பிறவுன்ஸ்விக் மாகாண பொலிசார் இருவர் கொல்லப்பட்டதால் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு மாகாணத்தின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் நியு பிறவுன்ஸ்விக் முதல்வர் பிரயன் காலன்ட் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு தங்கள் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிட வேண்டாம் எனவும் இன்று அதிகாலை பொலிசார் மக்களை கேட்டுக்கொண்டனர்.

சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள முக்கிய சந்திப்புக்கள் பொலிசாரின் அவசர சேவை வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

சம்பவம் நடந்த பகுதி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சுற்றுப்புற வர்த்தகங்கள் மூடப்பட்டன.

1669 total views