கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு!

Report
131Shares

இந்த வருடத்தில் இதுவரை கிட்டத்தட்ட மூன்று டசின்கள் ஆடம்பர வாகனங்கள் ஒட்டாவாவில் மட்டும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “relay box,” எனப்படும் ஒரு உயர்-தொழில் நுட்ப சாதனத்தை பயன்படுத்தி இத்தகைய திருட்டுக்கள் செய்யப்படுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீற்றர் வோக்ஸ் என்பவர் வியாழக்கிழமை காலை எழுந்து பார்த்த போது அவரது லெக்ஸஸ் இருக்கவில்லை. ரொறொன்ரோவை சேர்ந்த இவரும் இவரது மனைவியும் அவர்களது மகளிடம் ஒட்டாவா சென்ற சமயம் திருட்டு இடம்பெற்றுள்ளது. இந்த வருடம் இதுவரை திருடப்பட்ட ஆடம்பர வாகன எண்ணிக்கையில் வோகசின் வாகனம் 35-வது வாகனம் ஆகும்.

நடு இரவு தங்களது வாகனம் திருடப்பட்ட போது வாகனத்திலிருந்து ஒரு அடி தூரத்தில் தாங்கள் இருந்ததாக தெரிவித்தனர்.

ஒரு சில நாட்களிற்கு முன்னர் கெயில் டவுனி குடும்பத்தினர் மூன்றாவது லெக்சஸ் வாகனத்தை இழந்தனர். மூன்று திருட்டுக்களும் இரண்டு மாதங்களிற்குள் நடந்துள்ளது.

புதிய இன்னுமொரு லெக்சசை வாங்கி ஓடு பாதையில் விடுவது மிக கடினமானதென கெயில் டவுனி தெரிவித்தார்.

திருடர்கள் “relay box,” எனப்படும் ஒரு சாதனத்தை உபயோகித்து திருட்டை செய்வதாகவும் இச்சாதனம் கார்களை திருடும் போது அலாரம் ஒலிக்க செய்யாதென பொலிசார் தெரிவித்தனர்.

லெக்சசை விட விலை உயர்ந்த வாகனங்கள் சுற்றுபுறத்தில் இருந்த போதிலும் அவைகள் திருடப்படவில்லை. இதிலிருந்து லெக்சசில் மட்டும் சில விவகாரங்கள் இருப்பதாகவும் கருதப்படுகின்றது.

5863 total views