வீதியில் தரையிறங்கிய விமானம்!

Report
52Shares

கல்கரி-சிறிய பயணிகள் விமானம் ஒன்று கல்கரி வீதி ஒன்றில் அவசரமாக தரையிறங்கியது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக விமான நிலையத்திற்கு செல்ல தேவையான அளவு எரிபொருள் விமானத்தில் இருந்ததாக அறிக்கை தெரிவிக்கின்றது.

விமானம் புறப்பட முன்னர் எரிபொருள் சோதனை செய்ய தவறி விட்டதாக போக்கு வரத்து பாதுகாப்பு சபை தெரிவித்தது.

விமானம் மெடிசின் ஹட்டிலிருந்து நான்கு பயணிகளுடன் புறப்பட்டு கல்கரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீற்றர்கள் தொலைவில் வீதி ஒன்றில் ஏப்ரல் மாதம் 25 காலை 6மணியளவில் தரையிறங்கியது. எவரும் காயப்படவில்லை.

2121 total views