புலம்பெயர்ந்தோருக்கு கனடாவில் அடித்த ஜாக்பாட்

Report
116Shares

கனடாவில் வசித்து வரும் ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் இரண்டு முறை லாட்டரி சீட்டுகளை வென்று பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 28 வயது நிறைந்த மெல்ஹிக் (Melhig Melhig) என்ற இளைஞர் தற்போது, கனடாவின் மனிடோபா, வின்னிபெக்கில் வசித்து வசிக்கிறார்.

ஆரம்பம் முதலே, லாட்டரி சீட்டுகளில் அதிக நம்பிக்கை கொண்ட இவர். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இரண்டு முறை லாட்டரி சீட்டுகளை வென்றுள்ளார்.

இதன் மூலம், இவர் 3.5 மில்லியன் கனேடிய டொலர்களுக்கு அதிபதியாகியுள்ளார். இந்நிகழ்வானது கேட்போர் அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதில், முதலாவது அதிர்ஷ்டலாபமாக 1.5 மில்லியன் கனேடிய டொலர்களையும், இரண்டாம் முறையாக 2 மில்லியன் கனேடிய டொலர்களையும் வென்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்ட லாப நிதியைக் கொண்டு முதலில் என்னுடைய கல்லூரி படிப்பை தொடர விரும்புகிறேன்.

பிறகு இந்த பணத்தில், புதிய தொழில் தொடங்கவும் எரிபொருள் நிலையம் அல்லது வாகன சேவை நிலையம் என்பவற்றை நிறுவவும், பயன்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

4678 total views