பட்டபகலில் மகனால் குத்தி கொலை செய்யப்பட்ட தந்தை!

Report

ரொறொன்ரோ-எற்றோபிக்கோவில் செவ்வாய்கிழமை பிற்பகல் மனிதன் ஒருவரின் மகன் தன் தந்தையை கொடூரமாக குத்தி கொலை செய்ததை தொடர்ந்து மகன் கைது செய்யப்பட்டான்.

மாட்டின் குரோவ் வீதி மற்றும் றெட்கிரேவ் டிரைவில் மாலை 4.30மணியளவில் சம்பவம் நடந்துள்ளது.

தந்தையும் மகனும் சண்டையில் ஈடுபட்டிருந்ததாகவும் இச்சமயத்தில் இருவருக்கும் குத்து காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கதரினா அரொகன்டே செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அவசர மருத்துவ சேவையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது இறந்தவர் உயிர் துடிப்பற்ற நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இறந்தவரின் வயது 50.

இரண்டாவது நபர் சம்பவம் நடந்த இடத்தை விட்டு ஒன்றில் ஓடிய போது நெடுஞ்சாலை 401ற்கு அருகாமையில் இஸ்லிங்டன் அவெனியுவில் வாகனம் ஒன்றிற்குள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை தவிர்க்க முயன்ற பெண் ஒருவரும் காயப்பட்டுள்ளார்.

இறந்தவர் அமீர் சாயிப் என அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார்.

2018ல் நகரில் இடம்பெற்ற 76வது கொலை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

5960 total views