கனடாவின் முதல் முகம் மாற்று அறுவைச் சிகிச்சை!

Report

மொன்றியல்--மொன்றியல் மைசோனூவ்-றோஸ்மொன்ட் வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்கள் கனடாவின் முதல் முகம் மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

64-வயதுடைய மனிதன் வேட்டையாடுகையில் சிதைந்து போன தனது முகத்தின் மாற்று அறுவைச்சிகிச்சை கடந்த மே மாதம் இடம்பெற்றது. 30-மணித்தியாலங்கள் வரை சிகிச்சை இடம்பெற்;றுள்ளது.

பிளாஸ்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டானியல் போர்சுக் தலைமையிலான அணி மொரிஸ் டெஸ்ஜாடின்சிற்கு இந்த அருஞ் சாதனையை செய்துள்ளார். இந்த சிகிச்சையை பெற்ற உலகின் முதலாவது வயதானவர் இவர் எனவும் கூறினார்.

ஒரு அற்புதமான அணியின் பல வருட ஒருங்கிணைந்த உன்னதமான வேலை மற்றும் நோயாளியினதும் அவரது குடும்பத்தினரினதும் நம்பமுடியாத துணிவு மற்றும் ஒத்துழைப்பு என்பனவுமே மிக நுண்ணியமான இச்சிகிச்சை வெற்றி பெற காரணம் என- பொர்சுக்- மொன்றியல் பல்கலைக்கழக ஆசரியர்- புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பல நிபுணர்களின் நிபுணத்துவம் மற்றும் 100- ற்கும் மேற்பட்ட நிபுணர்களின-டாக்டர்கள் மருத்துவ தாதிகள் மற்றும் பல பணியாளர்கள் உட்பட- ஒத்துழைப்பும் தேவைப்பட்டது.

இந்த மாற்று கொடையாளி ஒருவரால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் கிடைக்கப்பெற்றது.

மாற்று சிகிச்சை பெற்றவர் சிகிச்சை நடைபெற்று நான்கு மாதங்களின் பின்னர் நலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-ல் இவருக்கு ஏற்பட்ட விபத்தின் பின்னர் ஐந்து புனரமைப்பு சத்திர சிகிச்சைகளின் பின்னர் தொடர்ச்சியான வலியுடன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.

மாற்று சிகிச்சை இவருக்கு இரண்டு தாடைகள், முக தசைகள், பற்கள், உதடுகள் மற்றும் முக்கு போன்றவை மட்டும் திரும்ப கொடுத்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.


1066 total views