தந்தையை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மகன்! மனைவி படுகாயம்

Report

எட்டோபிகோக்கில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் மீது, கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க தந்தை மற்றும் 20 வயது மகனுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து மகன் கத்தியால் குத்தியதில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் ரெட்ஜ்ரேவ் டிரைவ், மார்ட்டின் கிரோவ் வீதி மற்றும் ஈக்லின்டன் அவென்யூ மேற்குக்கு அருகில் நேற்று மதியம் 4:30 க்கு இடம்பெற்றுள்ளது.

இதன் போது மேலும் அவரது மனைவி சிறு காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்தில இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரான மகன் நெடுஞ்சாலை 401 இல் விபத்துக்குள்ளானார்.

குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் கத்திக்குத்து காயங்களுக்கு இலக்காகிய அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை சந்தேகநபரான மகன் வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

676 total views