கனடா விமான நிலையத்தில் பிரித்தானிய விமானம் அவசரமாக தரையிறக்கம்!

Report

பிரித்தானிய விமானமொன்று பறந்துகொண்டிருக்கும் வேளையில், திடீரென கனடா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ..!

பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பிரிட்டிஸ் எயார்வேஸ் விமானம் நேற்று காலை தொடக்கி 200 பேர் கொண்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது...

அப்போது, திடீரென எதிர்பாரா விதமாக விமானத்தில் முன்தளத்தில் இருந்து புகைவெளிப்பட்டதால் உடனடியாக கனடாவில் உள்ள இகலூட் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 7.20 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

இது குறித்து சோதனையில் விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே புகை வெளிவந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் விமானத்தில் இருந்த 200 பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்.

10581 total views