145,000 வோல்ட் மின்னேற்ற மின்சார அதிர்ச்சியால் உறுப்புக்களை இழந்த பெண்!

Report

கியுபெக்கை சேர்ந்த சப்ரினா மொன்கோன் என்பவர் மின்சார கம்பத்துடன் மோதியதால் கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டன.

கியுபெக் மேற்கை சேர்ந்த 19-வயதுடைய இப்பெண் கடந்த கிறிஸ்மஸ் ஈவ் தினத்தன்று மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகி கை கால்களை இழந்த பின்னர் மீண்டும் பாடசாலைக்கு செல்லவும் புனர்வாழ்வு நிலையத்தில் சந்தித்த நபரை மணந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மோசமான மின்சார அதிர்ச்சியால் தாக்கப்பட்டதுடன் காப்பாற்றப்படுவதற்கு முன் பல மணித்தியாலங்கள் குளிரில் கழித்தும் உள்ளதாக கூறினார்.

தனது அனுபவத்தை றேடியோ கனடா மூலம் கியுபெக்கிலிருந்து பகிர்ந்து கொண்டார்.

டிசம்பர் 24, 2017 அன்று மோங்கோன் வீட்டிலிருந்து சினேகிதி ஒருவரை சந்திக்க சென்றுள்ளார். காலநிலை சரியானதாக இல்லாத காரணத்தால் நெரிசல் குறைவான பாதையில் சென்றார்.

மின்கம்பம் ஒன்று இவரது வாகனத்தின் மேல் வீழ்ந்துள்ளது.

வாகனத்தை விட்டு இவர் வெளியேறி போது 14,500 வால்டேஜ் மின்சாரம் அவரது கைகளிற்கூடாக நுழைந்து உடலிற்குள் சென்று பாதங்களின் ஊடாக வெளியேறியுள்ளது.

நான்கு மணித்தியாலங்கள் உணர்வுடன் இருந்த இவர் தனது காரிற்குள் செல்ல முயன்றதாக இவரது சகோதரி கூறினார். ஆனால் வாகனத்தை இயக்குவதற்கு போதிய வெப்பம் இருக்கவில்லை.

இறுதியில் அவ்வழியால் சென்றவரால் உதவி வழங்கப்பட்டது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் மருத்துவ ரீதியாக கோமா நிலைக்கு மாற்றப்பட்டார்.

டிசம்பர் 27, கண்விழித்த போது கைகள் மற்றும் கால்கள் அகற்றப்பட்ட நிலைமையில் காணப்பட்டார்.

மொன்றியல் மறுசீரமைப்பு மையத்தில் இருந்து புதன்கிழமை வெளியேறியுள்ளார்.

செயற்கை உறுப்புக்களுடன் உயிர் வாழ்வது கடினமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

வலது காலில் வலி இருப்பதால் நடப்பதற்கு ஊன்று கோல் பாவிப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர் காலத்தில் ஒரு இயற்கை மருத்துவராக வர விரும்புவதாகவும் கூட ஒரு பொது பேச்சாளராக வர வேண்டும் எனவும் கூறினார்.

மறுசீரமைப்பு மையத்தில் சந்தித்த தனது காதலனை- கனடிய ஆயுதப்படை அங்கத்தவர்-திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தினர் தனக்கென ஒரு விசேட வீடொன்றை கட்டிவருவதாகவும் தெரிவித்தார். crowdfunding பிரச்சாரம் மூலம் கிடைக்கப்பெற்ற 200,000 டொலர்கள் இந்த வீடு கட்ட உபயோகிக்கப்படுகின்றது.

5198 total views