கோடிஸ்வர அகதியின் வித்தியாசமான ஆசை

Report

கனடாவில் கோடிஸ்வர அகதி ஒருவர், அதிஸ்டலாபச்சீட்டு மூலம் தமக்கு கிடைத்த பெருந்தொகை பணத்தினையும் தமது கல்விக்காக செலவிடவுள்ளதாக தெரிவித்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் ஆப்பிரிக்கரான Melhig Melhigக்கு (28) ஏப்ரல் மாதம் அதிஸ்டலாபச்சீட்டு மூலம் 1.5 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்தது.

அந்த பணத்தை பயன்படுத்தி குடியிருப்பு ஒன்றிலிருந்து புதிய வீடு ஒன்றிற்கு குடும்பத்துடன் குடி புகுந்தார் அவர்.

இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் அவருக்கு அதிஸ்டலாபச்சீட்டு மூலம் மீண்டும் 2 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள பணத்தை என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு அவர் ஒரு சொந்த தொழில் தொடங்க இருப்பதாகவும், பின்னர் பள்ளிக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது முக்கிய நோக்கம் பள்ளிக்கு செல்வதுதான், எனது ஆங்கிலத்தை நான் மேம்படுத்த வேண்டும், அதற்கு பிறகு தச்சு வேலை போன்ற தொழிற்கல்வி எதையாவது கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்கிறார் அவர்.

7244 total views