நீதி மன்றம் செல்லும் ரொறொன்ரோ வான் தாக்குதல் சந்தேக நபர்.

Report

ரொறொன்ரோ-பரபரப்பான ரொறொன்ரோ வீதி ஒன்றில் வான் ஒன்றை செலுத்தி சென்று 10பேர்களை கொன்றதுடன் டசினிற்கும் மேலானவர்களை காயப்படுத்திய குற்றவாளி இன்று நீதி மன்றத்தில் ஆஜராவாரென எதிர் பார்க்கப் படுகின்றது.

றிச்மன்ட் ஹில் ஒன்ராறியோவை சேர்ந்த 25-வயதுடைய அலெக் மினசியான் 10 முதல் கட்ட கொலை மற்றும் 16 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்குகின்றார். இந்த கொடூர சம்பவம் ஏப்ரல் 23நடந்தது.

இந்நபர் வாடகை வான் ஒன்றை நடைபாதையில் ஏற்றி அவ்வழியால் சென்று கொண்டிருந்த மக்களை இரக்கமின்றி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சம்பவம் ஏதும் இன்றி கைது செய்யப்பட்டார்.

4540 total views