கனடாவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய சம்பவம்

Report
157Shares

குறித்த சம்பவமானது, கனடாவின் Prince George என்னும் நகருக்கு அருகில் நேற்று மாலை சுமார் மணி 5.45-மணியளவில் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று, எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேலானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எரிவாயு குழாய் நிறுவனத்தார் தீ பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தியதில் எவருக்கும் எந்த விதமான காயமும் உயிர்சேதமும் ஏற்படவில்லை.

எனினும், எரிவாயு வழங்கலும் நிறுத்தப்பட்ட நிலையில், எரிவாயு குழாய் வெடித்ததற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், இது குறித்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

5478 total views