ஸ்காபரோவில் வாகன திருத்துமிடத்தில் திடீர் தீ விபத்து!

Report

ஸ்காபரோவில் அமைந்துள்ள வாகன திருத்துமிடம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது, Danforth வீதி பகுதியில் உள்ள Granger Avenue வில் அமைந்துள்ள வாகன திருத்துமிடத்தியே நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் அரங்கேறியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரொறன்ரோ தீயணைப்பு படை அதிகாரிகள், கட்டுக்கடங்கா தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், அங்கிருந்த 5 உயர் மதிப்பு கொண்ட பிக் ரக வாகனங்கள் தீக்கிரையாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த விபத்து குறித்து எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2531 total views