கனடாவில் கஞ்சா பாவனை சட்டப்பூர்வமாக்கப்படும்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

Report

கனடாவில் கஞ்சா பாவனை அடுத்த வாரம் சட்டப்பூர்வமாக்கப்பட உள்ள நிலையில், கஞ்சாவை பாவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கஞ்சா பயன்பாடானது வரும் 17 ஆம்தேதி முதல் கனடா முழுவதும் சட்டப்பூர்வமாக்கப்படவுள்ளது. இருப்பினும், கஞ்சாவை பாவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு புதிய ஒழுங்கு விதிமுறைகளை விதித்துள்ளது.

இதற்கு முன்னர் விதிக்கப்பட்ட சட்டங்கள் அமுலில் இருக்கும் என்றும், அதனை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், கஞ்சா பாவனையானது கனடாவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டால் கூட, அதிகமாக பாவித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு 5 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தை மீறும் பட்சத்தில் குற்றத்தை பொறுத்து பலவருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1938 total views