முன்னாள் பிரதமரின் கடும் விமர்சனத்தில் கனடாவின் நீதித்துறை நியமனம்!

Report

கனடாவின் அண்மைய நீதித்துறை நியமன செயல்முறை மாற்றம் குறித்து கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் க்ரேஷியன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து கனேடிய ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ஆளும் லிபரல் கட்சி கனடாவில் நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக தீர்மானிப்பதற்கென நீதித்துறை ஆலோசனை குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளது.

ஆனால், இதுவொரு சாத்தியமான தீர்மானமல்ல. இக்குழுவினர் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொள்வர். ஆனால் அதில் எவரும் தலையிட முடியாத நிலை ஏற்படும் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடாவில் ஒரு மோசமான நீதிபதி இருப்பின், அதற்கு பிரதமரும், நீதியமைச்சருமே பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

முன்னதாக, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கெவனாக்கின் நியமனத்தை தொடர்ந்தே கனேடிய முன்னாள் பிரதமரின் கடுமையான விமர்சனம் வெளியாகியுள்ளது பெரும் சர்சையாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

1473 total views