கனடா தாய் கண்ணீருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோரிக்கை!

Report
244Shares

தன் மகனை மீட்டுத் தருமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கனடாவில் வாழும் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவை சேர்ந்த Tammy Chan என்ற பெண் ஒருவர் அர்மீனியாவை பிறப்பிடமான கொண்ட Armen Avansi என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்..

இதையடுத்து, இந்த தம்பதியினருக்கு Alex என்னும் மகன் பிறந்தான். சிறிது காலத்திற்கு பிறகு இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஒண்டாரியோ நீதிமன்றம் குழந்தை Alex தாயிடம்தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.

எனினும், Armen Avansi35 தன்னுடைய குழந்தையான Alex என்பவரை தன்னுடன் அழைத்து சென்று விட்டார்.

இதையடுத்து,Tammy குழந்தையை தன்னுடன் அழைத்து வர பலமுறை முயற்சி செய்தும் Armen Avansi குழந்தையை திருப்பி அனுப்பவே இல்லை.

இந்நிலையில், அர்மீனியாவுக்கு உச்சி மாநாட்டிற்காக விஜயம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் Tammy Chan கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

அதில் அவர், என் குழந்தையை முன்னாள் கணவரிடமிருந்து கனடா நாட்டுக்கு அழைத்து வர அர்மீனிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கோரியுள்ளார்.

8692 total views