சீக்கியர்களுக்கு தலைக்கவசம் தேவையில்லை ஒன்ராறியோ அரசு அறிவிப்பு!

Report

சீக்கியர்கள் தலைக்கவசம் இன்றி தலைப்பாகையுடன் உந்துருளியில் செல்வதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளது.

ஒன்ராறியோவின் முற்போக்கு பழமைவாதக் கடசி அரசாங்கம் இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

இதே மாதிரியான விதிவிலக்கு ஏற்கனவே கனடாவின் மூன்று மாநிலங்களில் நடப்பில் உள்ள நிலையில், ஒன்ராறியோவும் நான்காவது மாநிலமாக இந்த சட்டத் தளர்வினை ஏற்டுத்தவுள்ளது.

இந்த புதிய நடைமுறையானது சீக்கிய மக்களின் சமூக உரிமைகளையும், சமய நம்பிக்கையையும் வெளிக்காட்டுவதற்கு வழிவகை செய்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய மாற்றம் குறித்து ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் கருத்து வெளியிடுகையில், “வீதிகளில் பாதுகாப்பு என்பது தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கும் எனவும், ஒவ்வொருவரும் தமது சொந்த பாதுகாப்புடன், சமூக பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

4262 total views