ஸ்காபரோவில் பெண் ஒருவருக்கு 70 வயது முதியவரால் நேர்ந்த விபரீதம்!

Report
126Shares

ஸ்காபரோவில் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளானமை தொடர்பில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்க்கம் வீதி மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில், Greencrest Circuitஇல் நேற்று இரவு ஏழு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது கத்திக் குத்துக்கு இலக்கான 50 வயதுடைய பெண் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் அவர் குறித்து இன்று காலையில் தகவல் வெளியிட்டுள்ள அதிகாரிகள், குறித்த அந்த பெண்மணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உயிர் பிழைத்துவிடுவார் என்று நம்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முதியவர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

5242 total views