கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு: இளைஞன் ஒருவர் பலி!

Report

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள தல்ராய்த் வீதியில் நேற்று (வியாழக்கிழமை) அன்று அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று, மர்ம நபர்கள் இருவர் தல்ராய்த் வீதியில் காரினுள் இருந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரொறொன்ரோ பொலிஸார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததுள்ள நிலையில் கிடந்த இளைஞன் ஒருவரை கண்டுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரை கண்டவுடன் துப்பாக்கிச்சூட்டை நடத்திய இருவர் சாம்பல் நிற காரில் தப்பிச் சென்றுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் 5 துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாக சாட்சி கொடுத்துள்ளார்.

1634 total views