கனடாவில் உருக்கு இறக்குமதிக்கு புதிய வரிவிதிப்பு அமல்!

Report

கனடாவில் உருக்கு இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் கனேடிய மத்திய அரசாங்கம் புதிய வரிவிதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த வரி விதிப்புகள் முறையானது வரும் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று நிதித்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏழு வகையான இறக்குமதி பொருட்களுக்கு 25 வீத புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய வரிவிதிப்பு முறையானது, கட்டடங்கள், அணைகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிக்க பயன்படுத்தப்படும் கனமான தகடுகள், உருக்கு கம்பிகள், வயர்கள் உள்ளிட்ட ஏழு பொருட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது

எனினும்,கனடாவில் ஏற்படுத்தப்பட்ட இந்த புதிய வரிவிதிப்பு முறையானது கட்டுமான தொழில்துறையை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1530 total views