10 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல் நடத்திய அஜாக்ஸ் ஆசிரியர்!

Report

அஜாக்ஸில் 10 வயது மாணவனிடம் பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது..

முன்னாதாக, கடந்த 2017 முதல் 2018 பள்ளி ஆண்டு வரை அஜாக்ஸில் டா வின்சி பொது பாடசாலையில் அவர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் 31 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர், தற்போது ரோலண்ட் மைக்கேனெர் பொது பாடசாலையில் ஆசிரியராக பணி புரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த விசாரணைகள் முடியும் வரை அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக டர்ஹாம் மாவட்ட பாடசாலை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

11057 total views