79 -வயதில் முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்தும் டொராண்டோ பாட்டி

Report
121Shares

டொராண்டோ பகுதியை சேர்ந்த லின்டோ என்ற முதியவர் ஒருவர், தனது 79- வயதில் முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதன் மூலம் படிப்பிற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை டொராண்டோ பகுதி மக்களிடையே அவர் நிரூபித்து காட்டியுள்ளார்.

கடந்த 50 வருடங்ககளாக கனடாவின் டொராண்டோ பகுதியில் வசித்து வரும் 79- வயது முதியவரான லின்டோ Jamaica-வை பிறப்பிடமான கொண்டவர்.

இவர், கடந்த நான்கு ஆண்டுகள் டொராண்டோ யார்க் பல்கலைக்கழகத்தில் பாலினம் மற்றும் மகளிர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

இதையடுத்து, அவரின் ஆய்வு பணிகள் நிறைவடைத்ததையடுத்து, நேற்று வியாழக்கிழமை யார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

5125 total views