ஒன்ராறியோ பெண் பாதசாரதிக்கு நேர்ந்த சோகம்

Report

ஒன்ராறியோவின் மிசிசாகுவா பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த பெண் பாதசாரதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது, மிசிசாகுவாவின் எரிந்தலை ஸ்டேஷன் ரோடு மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட். பகுதியில் நேற்று சரியாக 7:45 மணியளவில் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தில் குறித்த பெண், வீதியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே குறித்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து குறித்த பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

4399 total views