14 வயது சிறுவன் உயிரழந்த சம்பவத்தில் இரண்டாவது சந்தேக நபர் கைது!

Report

மிசிசாகாவில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை மிசிசாகாவில் உள்ள பூங்காவில் 14 வயது சிறுவன் ஒருவரின் சடலம் மிட்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரின் மனித கொலை குறித்த சிறப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Truscott Drive மற்றும் Southdown வீதியில் அமைந்துள்ள Meadow Parkஇல், நேற்றுக் காலை எட்டு மணியளவில், அந்த பகுதியால் சென்ற ஒருவர் இந்த சடலத்தைக் கண்டு பொலிஸார் தகவல் கொடுத்துள்ளார்.

அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீடடதுடன், மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவின்ர் விசாரணைகளைப் பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் நேற்றுக் காலையில் மீட்கப்பட்டுள்ள போதிலும், சிறுவன் இறந்து எவ்வளவு நேரம் ஆகியிருக்கக்கூடும் என்ற தகவல் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. அதேவேளை சிறுவனின் உடலில் தாக்குதல்களுக்கான அடையாளங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 20 வயதுடைய இரண்டாது சந்தேகநபரையும் குறித்த சிறுவனின் கொலை தொடர்பில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

13075 total views