ஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி

Report

கனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூவை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சீனா எச்சரித்துள்ளது.

ஹூவாவி நிறுவனரின் மகளும் அவர் நிறுவிய ஹுவாவி டெக்னால ஜீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்க் வான்சூ டிசம்பர் 1 ஆம் திகதி கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் தூண்டுதலால் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன வெளியுறவுத் துணை அமைச்சர் லீ யூசெங் சீனாவுக்கான கனடா தூதர் ஜோன் மெக்கெல்லத்துக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் மெங்க் வான்சூவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை மெங் எந்த குற்றமும் செய்யவில்லை, இந்த கைது நடவடிக்கை அவரது மனித உரிமைகளை மீறும் வகையில் உள்ளது” என சீனாவின் தூதரகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

9239 total views