கனடா மற்றும் பிரித்தானியாவில் தொழில் தேடும் இளைஞர்கள்!

Report

ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அமெரிக்காவை விட தற்போது கனடா மற்றும் பிரித்தானிய நாடுகளில் அதிகம் தொழில் வாய்ப்புகளை தேடி வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை மற்றும் பிற ஆசிய நாட்டவர்கள் அமெரிக்காவில் தொழில்தேடும் விகிதம் குறைந்துள்ளது. உலகளாவிய ரீதியாக தொழில் தேடும் இணையத் தளமான இண்டீட், வெளிநாடுகளில் தொழில் தேடும் இளைஞர் தொடர்பான ஆய்வை வெளியிட்டுள்ளது.

2016 ஓகஸ்ட் மாதம் முதல் 2018 ஜூலை வரையிலான இரண்டாண்டுக் காலத்தில் இணையத்தளங்கள் வழியாக அமெரிக்காவில் தொழில் தேடும் சதவீதம் 60 தில் இருந்து ஐம்பது சதவீதமாக குறைந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் கனடாவில் தொழில் தேடும் ஆசிய நாட்டவர்களின் விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பம், நிதி ஆகிய துறைகளில் படித்தவர்களுக்குக் கனடாவில் நல்ல வருமானம் கிடைப்பதும், கனடாவுக்குச் செல்வதற்கான விசா நடைமுறைகள் எளிதாக இருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதேபோல் இணையத்தளங்கள் வழியாக பிரித்தானியாவில் தொழில் தேடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

4426 total views