ஒன்ராறியோ மாகாணத்திற்கு 4-பில்லியன் டொலர்கள் இழப்பு!

Report
20Shares

ஒன்ராறியோ மாகாணத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 4 -பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறித்த அறிவிப்பு, ஒஷாவாவில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டோர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படவுள்ள நிலையில், வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலை மூடப்படுவதன் காரணமாக, 4,400 பேருக்கான வேலை இழப்புகள் உடனடியாக அது ஒன்ராறியோ பணியாளர் சமூகத்தில் பலத்த பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அடுத்துவரும் 5 ஆண்டுகளில் அந்த எண்ணிககை 6,300 ஆக அதிகரிக்கும் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டவில் ஒன்ராறியோவில் 14,000 பேர் வேலை அற்று இருப்பதற்கு, இந்த தொழிற்சாலை மூடப்படுவது காரணமாக அமையும் என்றும் அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

1012 total views