தெற்கு சஸ்காச்சுவானில் ஆறு பேரின் உயிரை பறித்த எச்1என்1 வைரஸ் காய்ச்சல்!

Report

தெற்கு சஸ்காச்சுவானில் எச்1என்1 வைரஸ் காய்ச்சலினால், ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல் தொடர்பாக சஸ்காச்சுவான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு சஸ்காச்சுவானில் 2019-ஆம் நடப்பு ஆண்டில் குறித்த கொடிய நோயினால், உயிரிழந்த மூன்று பேர் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய்க்கான தடுப்பூசி உள்ளபோதும், அதனை போட்டுக்கொள்ள மக்கள் மிக தமாதப்படுத்துவதாக சஸ்காச்சுவான் சுகாதார அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், எச்1என்1 வைரஸ் காய்ச்சல் தாக்கம், அடுத்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1543 total views