ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலை மூடல்: விண்ட்சரில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு!

Report

ஒஷவ பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விண்ட்சரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது, ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு, நேற்று, (வெள்ளிக்கிழமை) விண்ட்சரில் நடைபெற்ற போதே முற்பகல் 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தினை,. ஒன்ராறியோவின் அனைத்து பாகங்களிலும் உள்ள வாகன தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினர்.

இந்த போராட்டத்தில், கிச்சனர், பிரம்ப்டன் மற்றும் லண்டன் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் உள்ள பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

குறித்த,தொழிற்சாலையினை மூடுவதனால், சுமார் 2600 பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலைக்கு, தள்ளப்பட்டு உள்ளனர்.

ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இரண்ட நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டமாக குறித்த போராட்டம் கருதப்படுகிறது.

932 total views