டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலிபர்!

Report

டொரோண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் 20-வயது வாலிபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, டொரோண்டோ பகுதியில், Bathurst Street மற்றும் Fort York Boulevard பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சரியாக 9-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டொரோண்டோ பொலிஸார் காயங்களுடன் இருந்த 20-வயது நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில், குறித்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில், இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டு, வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

1693 total views