நள்ளிரவில் வீடு புகுந்து கத்திகுத்து தாக்குதல்: இருவருக்கு நேர்ந்த சோகம்!

Report
35Shares

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில், இருவர் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்திய 40 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரிட்ஜ் மெடோவ்ஸ் என்ற குறித்த நபர் 450000 பிளொக் ஹொட்ஜின்ஸ் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்குள், நள்ளிரவு வேளையில் நுழைந்து கத்திகுத்து தாக்குதல் நடத்தியதாக, பொலிஸார் கூறுகின்றனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கத்திக்குத்து காயங்களுடன்இருவர் இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த இருவரும், உயிராபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1459 total views