கனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை!

Report

கனடாவின் சில முக்கிய பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என்பதுடன் பனிப்புயல் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கனடாவின் லண்டன், பிரிட்டிஷ் கொலம்பியா, எட்மன்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கே இவ்வாறு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை, கனேடிய காலநிலை அவதான விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளதோடு, புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3934 total views