எட்மன்டன் துப்பாக்கி சூட்டில் சிக்கி மூன்று பேர் படு காயம்!

Report

எட்மன்டன் துப்பாக்கி சூட்டில்,சிக்கி 30- வயது மதிக்கத்தக்க மூன்று பேர் படுகாயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூடு, தெற்கு எட்மண்டன் எல்லர்லி சாலை மற்றும் 114 தெருவில் சனிக்கிழமை மதியம் சரியாக மாலை 5-30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், குறித்த துப்பாக்கி சூட்டில் சிக்கி இரண்டு பேர் காயங்களுடனும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பாக எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் EPS at 780-423-4567 என்ற இலக்கு அல்லது

Crime Stoppers at 1-800-222-8477 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2191 total views