ஒட்டாவாவில் தொடரும் குளிர் வானிலை - பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

Report

கனடாவின் ஒட்டாவாவை சுற்றியுள்ள பகுதியில், கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என சுற்று சூழல் கனடா எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறித்த, ஒட்டாவா-காடினேவு, ரென்ஃப்ரூ-பெம்பிரோக், பிரச்காட் மற்றும் ரஸல், ஸ்மித்ஸ் ஃபால்ஸ்-லானார் மற்றும் கார்ன்வால்-மோரிஸ்ஸ்பர்க் ஆகிய பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாக, வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை தொடர்ந்து அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு உள்ளனர்.

இந்நிலையில், குறித்த பகுதியை நோக்கி தற்போது குளிர் வானிலை கடந்து செல்லும் நிலையில், ஒட்டாவாவில் செவ்வாய் கிழமை மற்றும் புதன்கிழமை வரை 30 முதல் 40 செ.மீ குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, ப்ரோக்வில்வில், கனாநெக், கிங்ஸ்டன், நாபனி, பிட்கன் மற்றும் பாங்க்ரோஃப்ட் பகுதிகளில் 25-35 செ.மீ. குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச்செய்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், முன்னதாக குறித்த 2019 ஆம் ஆண்டில் ஒட்டாவா 125 செ.மீ. பனிப்பொழிவை ஏற்கனவே பெற்றுள்ளது, அதில் ஜனவரி மாதம் 101.8 செ.மீ அதிகபட்ச குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

596 total views