ரயில் பாதையில் வாகனம் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சோகம்!

Report

டொராண்டோவின் ஒரு மார்க்கம் ரயில் பாதையில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவசர உதவி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி Ninth Line மற்றும் Steeles அவென்யூவின் குறித்த பகுதிக்கு சுமார் 6 மணியளவில் அவர்கள் விரைந்து வந்தனர்.

இதில், சம்பவ இடத்திலேயே அதிக காயங்களுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருந்ததாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

மேலும், குறித்த பகுதியின் ரயில் பாதை மூடப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

423 total views